- மனிதர்கள் தம் எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி செயல்பட வேண்டும் என்று அறிவுரை சொன்னால் மட்டும் போதாது. மனிதர்கள் தம் எண்ணங்களை ஏன் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி செயல்படவேண்டும், மனிதர்கள் தம் எண்ணங்களை ஏன் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்துவது எப்படி என்பதையும் அறிவுரை சொல்பவர்கள் சொல்லவேண்டும்.
- மனிதர்கள் தம் எண்ணங்களை ஏன் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி செயல்படவேண்டும், மனிதர்கள் தம் எண்ணங்களை ஏன் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்துவது எப்படி என்பதை எவரும் சொல்வதில்லை.
- விலகல் என்ற செயல் இருப்பதால்தான் மனிதர்கள் தம் எண்ணங்களை ஏன் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
- நீ பார்த்த பொருட்கள் அனைத்தையும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் பார்த்திருப்பார்களா? பார்த்திருக்க மாட்டார்கள்.
- நான் பார்த்த பொருட்கள் அனைத்தையும் நீ பார்த்திருக்க மாட்டாய். நீ பார்த்த பொருட்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்க மாட்டேன்.
- ஆனால், விலகல் என்ற செயலை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். மானிடராய் பிறந்த ஒவ்வொருவரும் பார்த்திருப்பார்கள். மானிடராய் பிறக்கப் போகும் ஒவ்வொருவரும் விலகல் என்ற செயலைப் பார்ப்பார்கள்.
- செயல்கள் யாவும் விலகலே. விலகினால்தான் கூடும்; கூடியதும் விலகும். விலகக்கூடியதைத்தான் ஈர்க்கமுடியும். விலகாததை ஈர்க்கமுடியாது. விலகலை விட்டு விலகா மனதால் மட்டுமே தன் எண்ணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்த முடியும்.
- மனிதராய் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஒரே விஷயம் விலகல். இந்த விலகல் என்னும் செயலை அடிப்படையாக கொண்டே மொழிகளும் சாஸ்திரங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களின் எண்ணங்கள் அனைத்தும் விலகல் என்னும் செயலை மையப்படுத்தியே இருக்கும்.
- விலகல் என்ற செயல் இல்லாவிட்டால் நம்மில் எவருக்கும் ஒருமைப்பாடு, ஒருமித்தல், ஒருங்கிணைத்தல், ஒருமுகப்படுத்தல் பற்றி சிந்தித்துப் பேச வேண்டிய அவசியம் இருக்காது.
- Vilagal: The Unifying Principle
- உன்னோடு கூடுமெதுவும் மற்றதிலிருந்து விலகியதே. உன்னோடு இருக்குமெதுவும் உன்னை விட்டு விலகக்கூடியதே.
- எதிலிருந்தும் எதுவும் விலகாவிட்டால், இவ்வுலகில் இயக்கம் என்பதே இருக்காது.
- எதிலிருந்தும் எதுவும் விலகி எதுவுடனும் கூடாது.
- எதுவும் ஒரு நிலையிலிருந்து விலகி மற்றொரு நிலைக்குச் செல்லாது.
- எதற்கும் ஏற்றமோ, இறக்கமோ, வளர்ச்சியோ, தளர்ச்சியோ ஏற்படாது.
- எதிலிருந்தும் எதுவும் விலகாவிட்டால், எந்த வரலாறும், அறிவியலும், புதுமையும் இருக்காது.
- எதிலிருந்தும் எதுவும் விலகாவிட்டால், -, +, →, ←, ↔, =, ≡, ÷, ⇄, ≠, ≈, <, ⋜, >, ⋝, ≂, ≃, ≄, ≅, ≆, ≇, ≉, ≊, ≋, ≌, ≢, ≣, ≤, ≥, ≦, ≧, ≨, ≩, ≪, ≫, ≬, ≭, ≮, ≯, ≰, ≱, ≲, ≳, ≴, ≵, ≶, ≷, ≸, ≹, ≺, ≻, ≼, ≽, ≾, ≿, ⊀, ⊁ போன்ற குறியீடுகளை மனிதகுலம் வகுத்திருக்காது.
- தன்னிடமிருப்பது எங்கே தன்னைவிட்டு விலகிவிடுமோ என்ற சந்தேகம் எந்த மனிதனையும் ஆட்டிப்படைக்காது.
- எதிலிருந்தும் எதுவும் விலகாவிட்டால், சமநிலை, ஒருமித்த நிலை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைத்தல், ஒருமுகப்படுத்துதல், ஒருநிலைப்படுத்தல் பற்றி சிந்தித்தாராய அவசியம் இருக்காது.
- ஒன்றுக்கொன்று விலகி நிற்கும் முரண்பாட்ட கருத்துகள் ஒருகாலும் தோன்றாது.
- எதிலிருந்தும் எதுவும் விலகாவிட்டால், இது இப்படியல்லவா இருக்கவேண்டும், அது அப்படியல்லவா இருக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எதிர்பார்த்ததிலிருந்து பார்த்தது விலகியிருப்பதால் தான் இது இப்படியல்லவா இருக்கவேண்டும், அது அப்படியல்லவா இருக்கவேண்டும் என்கிறார்கள்.
- விலகல் என்றும் நிலைத்திருக்கும். (எது என்றும் நிலைத்திருக்கும்? விலகல் என்றும் விலகாமல்
நிலைத்திருக்கும்)
- விலகிப் போவதைக் காண்பதும், விலகி வருவதைக் காண்பதும், விலகிப் போனாதாலும், விலகி வந்தாலும் ஏற்படும் விளைவுகளைக் காண்பதும், ஏன் விலகிப் போனது, ஏன் விலகி வந்தது, எதிலிருந்து எது எப்படி விலகி வந்தது, எதிலிருந்து எது எப்படி விலகி வந்தது, எதிலிருந்து எது எதை நோக்கி எப்படி விலகிப்போனது என்பவற்றை காண்பதும் மனிதகுலத்திற்கு புதிதல்ல.
- விலகலைக் காண்பதிலிருந்து விலக மனிதகுலத்தால் என்றும் முடியாது.
- மனிதகுலத்தை விட்டு விலகா விலகலே மனித எண்ணங்களை ஒருங்கிணைக்கும் மையமாகும்.
- மனிதகுலத்தை விட்டு விலகா விலகலே மனிதகுலம் என்றும் போற்றி விவாதித்து வரும் விதிகளுக்கும், அறிவியலுக்கும், கணிப்புகளுக்கும் அடிப்படை மூலமாகும்.
- ஒன்றிலிருந்து விலகினால்தான் இன்னொன்று.
- ஒரு நிலையிலிருந்து விலகினால்தான் இன்னொரு நிலை.
- ஒரு நிலையிலிருந்து விலகாமல் இன்னொரு நிலையை யாராலும், எதாலும் அடையமுடியாது.
- ஓரிடத்திலிருந்து விலகினால்தான் இன்னொரு இடம்.
- ஒரு கட்டத்திலிருந்து விலகினால்தான் இன்னொரு கட்டம்.
- ஒரு எண்ணத்திலிருந்து விலகினால்தான் இன்னொரு எண்ணம்.
- ஒரு திட்டத்திலிருந்து விலகினால்தான் இன்னொரு திட்டம்.
- முறையிலிருந்து விலகினால்தான் முறையற்றது.
- சரியானதிலிருந்து விலகினால்தான் பிழை.
- உடலிருந்து உயிர் விலகினால்தான் மரணம்.
- நன்மையிலிருந்து விலகினால்தான் தீமை.
- தெளிவிலிருந்து விலகினால்தான் குழப்பம்.
- ஒன்றிலிருந்தொன்று விலகியோடுவதைத் தடுத்தால் அழுத்தம் ஏற்படும்.
- விலகியோடும் நீரை, அதாவது, நீரோட்டத்தை தடுத்துத் தேக்கினால் நீரழுத்தம் ஏற்படும்.
- விலகியோடும் காற்றை, அதாவது, காற்றோட்டத்தை தடுத்துத் தேக்கினால் காற்றழுத்தம் ஏற்படும். அதாவது, ஓடிக்கொண்டிருக்கும் காற்றைப் பிடித்தடைத்து வைத்தால், அதாவது, காற்றோட்டத்தை தடுத்துத் தேக்கினால் காற்றழுத்தம் ஏற்படும்.
- மின்னோட்டத்தை தடுத்துத் தேக்கினால் மின்னழுத்தம் ஏற்படும்.
- இரத்த ஓட்டத்தை தடுத்துத் தேக்கினால் இரத்த அழுத்தம் ஏற்படும்.
- எண்ண ஓட்டத்தை தடுத்துத் தேக்கினால் எண்ண(மன) அழுத்தம் ஏற்படும்.
விலக்கமில்லா ஒருமித்த நிலையை அடைய
|
- ஒன்றைவிட்டொன்று விலகாமல் ஒருமித்திருக்கும் நிலை சமநிலையாகும்.
- ஒன்றுக்கொன்றிருக்கும் விலக்கங்களை விலக்கினால்தான் ஒருமித்த சமநிலையை அடையமுடியும்.
- சமநிலையை விட்டு விலகியவை மீண்டும் ஒருமித்து சமநிலைக்குத் திரும்புமா, திரும்பாதா என்பது அவை சமநிலையை விட்டு எந்தளவிற்கு விலகியுள்ளன என்பதைப் பொறுத்தது.
- ஒருமித்த சமநிலையை அறிந்தால்தான், அவை சமநிலையை விட்டு எந்தளவிற்கு விலகியுள்ளன என்பதை அறியமுடியும். எடுத்துக்காட்டாக:
- ஆணைவிட்டுப் பெண்ணும், பெண்ணைவிட்டு ஆணும் விலகாவரை, ஆணும் பெண்ணும் ஒருமித்து சமமாக ஒரே நிலையில் இருப்பார்கள். ஒருமித்த சமநிலையை விட்டு விலகிய ஆணும் பெண்ணும் சமநிலைக்குத் திரும்புவார்களா, திரும்பமாட்டார்களா என்பது அவர்கள் சமநிலையிலிருந்து எந்தளவிற்கு விலகியுள்ளார்கள் என்பதைப் பொறுத்தது. தம்மிடையே உள்ள விலக்கங்களை(வேறுபாடுகளை) விலக்கினால்தான், ஒருவருக்கொருவர் விலகாமல் ஒருமித்து நிற்கும் சமநிலையை அடையமுடியும்.
- அதை விட்டு இதுவும், இதைவிட்டு அதுவும் விலகாவரை, அதுவும் இதுவும் ஒருமித்து ஒரே நிலையில் சமமாக இருக்கும். சமநிலையை விட்டு விலகிய அதுவும் இதுவும் சமநிலைக்குத் திரும்புமா, திரும்பாதா என்பது அவை சமநிலையிலிருந்து எந்தளவிற்கு விலகியுள்ளன என்பதைப் பொறுத்தது. அதற்கும், இதற்கும் இடையேயுள்ள விலக்கங்களை விலக்கினால்தான், ஒன்றோடொன்று ஒருமித்து நிற்கும் சமநிலையை அவற்றால் அடையமுடியும்.
சமநிலையிலிருந்து ஒன்றுக்கொன்று எவ்வளவு விலகியிருக்கிறது?
|
- அனைத்தும் சமமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதைக் குறிப்பது சராசரி.
- சமநிலையிலிருந்து ஒன்றுக்கொன்று எவ்வளவு விலகியிருக்கிறது என்பதைக் குறிப்பதுதான் இந்த deviation, mean deviation, standard deviation, hypothesis test, student's t-test, chi-square test, significance test போன்றன.
- இங்கு எடுத்ததும் அங்கு எடுத்ததும் ஒரே மாதிரியிருக்கிறதா, அல்லது ஒன்றுக்கொன்று விலகியிருகிறதா?
- இங்கு வாங்கியதும் அங்கு வாங்கியதும் சமமாக ஒரே மாதிரியிருக்கின்றனவா, அல்லது ஒன்றுக்கொன்று விலகியிருக்கிறதா?
- நேற்று மாதிரியே தான் இன்றும் இருக்கிறதா, அல்லது ஒன்றுக்கொன்று விலகியிருக்கிறதா?
- சோதனைக்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரியிருக்கிறதா, அல்லது ஒன்றுக்கொன்று விலகியிருக்கிறதா?
- எதிர்பார்த்த மாதிரியேதான் பார்ப்பது இருக்கிறாதா, அல்லது ஒன்றுக்கொன்று விலகி இருக்கிறதா?
- இவன் செய்வதும் அவன் செய்வதும் ஒரே மாதிரி சமமாக இருக்கிறதா அல்லது ஒன்றுக்கொன்று விலகி இருக்கிறதா?
- ஆணும் பெண்ணும் சமநிலையில் இருக்கிறார்களா, அல்லது ஒருவருக்கொருவர் விலகியிருக்கிரார்களா?
- மக்கள் அனைவரும் சமநிலையில் இருக்கிறார்களா, அல்லது ஒருவருக்கொருவர் விலகியிருக்கிறார்களா?
- மக்கள் அனைவரும் சமமான ஒருமித்த கருத்தைக் கொண்டு இருக்கிறார்களா, அல்லது ஒருவருக்கொருவர் விலகியிருக்கிறார்களா?
மேற்படிக் கேள்விகளுக்கு முறைப்படி எப்படி பதிலளிப்பது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
Sampling distribution மற்றும் sampling error - இங்கு எடுத்ததும் அங்கு எடுத்ததும் சமமாக ஒரே மாதிரி இருக்கிறதா அல்லது ஒன்றுக்கொன்று விலகி இருக்கிறதா?
எதிர்பார்த்தும் (expectation), பார்த்ததும் (observation) ஒரே மாதிரி இருக்கிறதா அல்லது ஒன்றுக்கொன்று விலகி இருக்கிறதா?
சொன்னதும்(hypothesis) செய்ததும்(observation) ஒரே மாதிரி இருக்கிறதா அல்லது ஒன்றுக்கொன்று விலகி இருக்கிறதா?
இதேமாதிரி, அவை ஒரே மாதிரி இருக்கிறதா அல்லது ஒன்றுக்கொன்று விலகி இருக்கிறதா என்ற ரீதியில் கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கொண்டே போகலாம். வெவ்வேறு பெயரும் வைக்கலாம். ஒன்றுக்கொன்று வில்கா நிலையில், அவைகளுக்கு இடையே எவ்விலக்கமும், அதாவது, எவ்வேறுபாடும் இருக்காது. ஒன்றுக்கொன்று விலகி நின்றால், அவற்றுக்கு இடையே வேறுபாடு இருக்கும். மாறாக, அவற்றுக்கு இடையே வேறுபாடு இருக்கிறதெனில் அவை சமநிலையில் இல்லை, ஒன்றுக்கொன்று விலகி இருக்கின்றன. அவற்றுக்கு இடையே வேறுபாடு ஏதும் இல்லையெனில் அவை சமநிலையில் இருக்கின்றன என்று அர்த்தம்.
இப்போது chi square test-ஐப் பாருங்கள்.
இதில், O - observed (பார்த்த) value , E - expected (எதிர்பார்த்த) value. எதிர்பார்த்த(E) மாதிரியே தான் பார்த்தது(O) இருக்கிறது என்றால், அவற்றுக்கு இடையே. அதாவது, பார்த்ததிற்கும், எதிர்பார்த்ததிற்கும் இடையே எவ்வேறுபாடும் இருக்காது ( O-E = 0); இல்லையென்றால் வேறுபாடு இருக்கும் (O - E ≠ 0).
Chi square -ன் மதிப்பு, அவை எந்த அளவிற்கு விலகி இருக்கின்றன என்பதைக் குறிக்கும். அதாவது, ஒன்றுக்கொன்று குறிப்பிடத்தகுந்த அளவு விலகியிருக்கின்றனவா, இல்லையா என்பதைக் குறிக்கும்.
வேறு எதை மக்களால் காட்டமுடியும்?